
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் கல்வியாளர் பேரா. டாக்டர் சபாபதி அவர்கள் தமிழ் சாரல் மீடியா நெட்ஒர்க்கிற்க்கு அளித்த சிறப்பு நேர்காணல்.
வாஷிங்டன், : அமெரிக்காவில் உள்ள பல்கலைக்கழகங்களில் படிக்கும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை தற்போது ஒரு லட்சத்தை தாண்டியுள்ளது. இதை அமெரிக்க அரசு மற்றும் சர்வதேச கல்விக்கான அமைப்பும் இணைந்து வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கிறது.
2007&08ம் கல்வி ஆண்டில் அமெரிக்க பல்கலைக்கழகங்களில் 94,563 இந்திய மாணவர்கள் படித்துள்ளனர். அது 2008&09ல் 1,03,260 ஆனது. இது 9.2 சதவீத உயர்வு. இந்தியா மட்டுமின்றி, அமெரிக்காவில் படிக்கும் மற்ற நாடுகளைச் சேர்ந்த மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. 1980 ஆம் ஆண்டிற்க்குப் பிறகு அதிகபட்சமாக வெளிநாட்டு மாணவர்கள் எண்ணிக்கை 8 சதவீதம் உயர்ந்துள்ளது. மொத்தம் 6,71,616 வெளிநாட்டு மாணவர்கள் அமெரிக்காவில் உள்ளனர்.
இரண்டாவதாக 2008&09ல் சீனா இரண்டாம் இடம் வகிக்கிறது. முந்தைய ஆண்டில் 81,127 சீன மாணவர்கள், அமெரிக்க பல்கலை கழகங்களில் படித்தனர். இப்போது 98,235 பேர் படிக்கின்றனர். இது 21 சதவீதம் அதிகம். 75,000 மாணவர்களுடன் தென்கொரியா மூன்றாவது இடத்தில் உள்ளது.
அமெரிக்க பல்கலைக்கழகங்களில் அதிகளவில் படிக்கும் வெளிநாட்டைச் சேர்ந்த மாணவர்கள் வரிசையில் இந்தியா தொடர்ந்து கடந்த 8 ஆண்டுகளாக முதலிடம் வகிக்கிறது. கல்விக் கட்டணம் மூலம் அமெரிக்க பொருளாதாரத்தில் கடந்த ஆண்டு மட்டும் இந்திய மாணவர்கள் ரூ.14,100 கோடிக்கு பங்கு வகித்தனர்.
மொத்த வெளிநாட்டு மாணவர்களின் பங்கு ரூ.93,660 கோடி. அதிலும், அமெரிக்காவில் நிதி நெருக்கடி தீவிரமாக இருந்த நேரத்தில் வெளிநாட்டு மாணவர் எண்ணிக்கை உயர்ந்தது குறிப்பிடத்தக்கது
--இந்நேரம்--