ராஜஸ்தான் ஆளுநர் எஸ்.கே.சிங் காலமானார்

புதுடெல்லி,​ டிச.1 ராஜஸ்தான் மாநில ஆளுநர் எஸ்.கே. சிங் ​டெல்லி மருத்துவமனையில் நேற்று காலமானார். அவருக்கு வயது 77.

இந்திய வெளியுறவுத் துறையில் நீண்ட காலம் சிறப்பாகப் பணியாற்றியவர் அவர், பாகிஸ்தான் தூதராக 1985 முதல் 1989 வரை பதவியில் இருந்ததன் மூலம் அந்நாட்டில் நீண்ட காலம் பணியாற்​றியவர் என்ற பெருமையைப் பெற்றார். 1989இல் வெளியுறவுத்​துறை செயலர் ஆனார்.

பதவியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு அருணாசலப் பிரதேச ஆளுநராக நியமிக்கப்பட்டார். பிரதிபா பாட்டீல் குடியரசுத் தலைவரானதால் ராஜஸ்தான் ஆளுநராக நியமனம் பெற்றார்.

அவருடைய இளைய மகன் கனிஷ்கா சிங்,​ ராகுல் காந்தியின் நெருங்கிய அரசியல் நண்பர் என்பது குறிப்பிடத்தக்​கது.

                                                                --Makkal Murasu--