கோழி இறைச்சி

அசைவ உணவு உண்போரால் அதிகம் விரும்பிச் சாப்பிடப்படுவது கோழி இறைச்சிதான். இதற்கு முக்கியக் காரணம், இதனுடைய சுவை. கோழி இறைச்சிக் கொண்டு ஆயிரக்கணக்கில், அறுசுவையிலும் உணவுகள் தயாரிக்கப்படுகின்றன.

கோழிக்கறி புரதச்சத்து மிகுந்த உணவாகும். கொழுப்புச்சத்து மிகவும் குறைவு. கோழி முட்டையில்தான் கொழுப்பு அதிகம். அதிகம் எண்ணெய் சேர்க்காமல், தந்தூரி முறையில் செய்யப்படும் கோழிக்கறி உணவுகள் மிகவும் ஆரோக்கியமானவை. கொழுப்பை தவிர்க்க நினைப்பவர்கள், மற்ற இறைச்சிகளை ஒதுக்கிவிட்டு கோழி இறைச்சியை சாப்பிடலாம்.
 

கோழி இறைச்சி 100 கிராம் உண்பதில் அடங்கியுள்ள சத்துக்கள் 
சக்தி (Energy) 109 கலோரிகள்

ஈரப்பதம்/நீர் (Moisture)  72.2 கிராம் 
புரதம் (Protein)  25.9 கிராம்

கொழுப்பு (Fat)  0.6 கிராம் 
தாதுக்கள் (Minerals)  1.3 கிராம்

கால்சியம் (Calcium)  25 மி.கி 
பாஸ்பரஸ் (Phosporous)  245 மி.கி

ரைப்போஃப்ளேவின் (Riboflavin)  0.14 மி.கி
போலிக் அமிலம் (Folic acid) 6.8 மை.கி  

   
                                                                                           Source: National Institute of Nutrition - Hyderabad