இறால்

கடல் உணவுகளில் மிகவும் சுவையானது இறால் உணவு. மீன்களுக்கு உள்ளது போல், முட்கள் நீக்கி சாப்பிடும் சிரமம் எதுவும் இல்லை. சமைப்பதும் மிக எளிதானது. இறாலிலும் புரதச்சத்து செறிந்து உள்ளது. கொழுப்பு குறைவு. தாதுக்கள் அதிக அளவில் உள்ளன. பல்வேறு வகையான இறால்கள் உள்ளன. அவற்றின் வகையைப் பொறுத்து விலையும் உள்ளது. பொதுவாக சற்று விலை அதிகமான கடல் உணவு இது. இறால் வகையைச் சேர்ந்த லாப்ஸ்டர்(Lobster) எனப்படும் பெரிய வகை சிங்கி இறாலின் சுவையைப் போன்றே அதன் விலையும் மிக அதிகம்.
 

                                                                        ... Prawn or Buttered Prawn

100 கிராம் இறாலில் அடங்கியுள்ள சத்துக்கள்
சக்தி (Energy) 89 கலோரிகள் ஈரப்பதம்/நீர் (Moisture) 77.4 கிராம்
புரதம் (Protein) 19.1 கிராம் கொழுப்பு (Fat) 1 கிராம்
தாதுக்கள் (Minerals) 1.7 கிராம் கார்போஹைட்ரேட்கள் (Carbohydrates) 0.8 கிராம்
கால்சியம் (Calcium) 323 மி.கி பாஸ்பரஸ் (Phosporous) 278 மி.கி
இரும்பு (Iron) 5.3 மி.கி சோடியம் (Sodium) 66 மி.கி
பொட்டாசியம் (Potasium) 262 மி.கி தையாமின் (Thiamine) 0.01 மி.கி
ரைப்போஃப்ளேவின் (Riboflavin) 0.10 மி.கி நியாசின் (Niacin) 4.8 மி.கி
கொலின் (Choline) 542 மி.கி    
Source: National Institute of Nutrition - Hyderabad