ஆரோக்கிய வாழ்வு

food and healthஆரோக்கியமாய் வாழவேண்டும் என்பதுதான் அனைவரின்  விருப்பமும். ஆனால், அதற்கான முயற்சிகளை, வழிமுறைகளை மேற்கொள்கின்றோமா என்றால் இல்லை என்றுதான் சொல்லவேண்டும். பொதுவாக நோய்வாய்ப் படும்போதுதான் நம் ஆரோக்கியத்தைப் பற்றின அக்கறையும், கவலையும் நமக்கு தோன்றுகின்றது. அதுவும் சிறிது நாட்களுக்குத்தான். நோயின் வேகம் குறைந்தவுடன் இந்த கவலையும், அக்கறையும் தானாகவே குறைந்துவிடுகின்றன.

இன்றைய நிலையில் ஏதேனும் ஒரு வகையில் உடல் நிலை பாதிக்கப்பட்டவர்களே உடல் ஆரோக்கியத்தைப் பற்றி மிகவும் அக்கறை கொண்டு அதனை மேம்படுத்த முயல்கின்றார்கள். கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம் என்பது போல். இந்நிலை கண்டிப்பாய் அகல வேண்டும். சீரான உணவு, முறையான உடற்பயிற்சி இவற்றின் மூலம் தேக ஆரோக்கியத்தை எப்போதும் நன்முறையில் வைத்துக் கொள்ளவேண்டும்.

உடல் ஆரோக்கியத்தில் உணவின் பங்கு மிகவும் முக்கியமானது. இன்னும் சொல்லவேண்டும் என்றால் பெரும்பான்மையான உடல் நலக்கேடுகள் முறையற்ற உணவினால்தான் தோன்றுகின்றன. உடல் ஆரோக்கியத்தில் உணவின் பங்கு குறித்தும், உடல் நலம் பேணிக்காக்க செய்யவேண்டியவை குறித்தும் ஏராளமான தகவல்களைத் திரட்டி, இந்த பகுதியில் தொகுத்துத் தர உள்ளோம்.