சாம்சங் புதிய செல்போனின் அறிமுகம்!

சென்னை,டிச.30: சாம்சங் செல்போன் தயாரிப்பு நிறுவனம், "காப்பி ஸ்பீடு' பெயரில் சிடிஎம்ஏ தொழில்நுட்ப வசதி கொண்ட புதிய ரக செல்போன்களை அறிமுகம் செய்துள்ளது.

சாம்சங் நிறுவனத்தின் செல்போன்  பிரிவு துணைத் தலைவர் ஹெண்டிரிக் லீ மற்றும் சிடிஎம்ஏ பிரிவு மூத்த மேனேஜர் திணேஷ் சர்மா இப்புதிய மாடல்களை அறிமுகம் செய்து வைத்து பேசினார்.

டச் ஸ்கிரீன் வசதியுடன் அறிமுகமாகியுள்ள காப்பி ஸ்பீடு மாடலில் உயர் வேக மொபைல் பிராட்பேண்ட் மற்றும் டவுன்லோடுகளுக்கான 2.4 எம்பிஎஸ் டேட்டா வேகத்திறன் கொண்டது. இளைய சமுதாயத்தினரை கவரும் வகையில் அதிக பயன்பாடுகளுடன் காப்பி ஸ்பீடு மாடல் சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். இதன் விலை ரூ.10 ஆயிரத்து 400 ஆகும்.

இதுதவிர எம்பவர் மேஜிக் 219, ட்யூவோஸ் 259 ஆகிய சிடிஎம்ஏ தொழில் நுட்ப வசதியுடன் கூடியது. மாடல்களையும் சாம்சங் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. ட்யூவோஸ்259ல் ஜிஎஸ்எம், சிடிஎம்ஏ ஆகிய இரண்டு விதங்களைக் கொண்டதாகும். இதன் விலை முறையே ரூ.3, 599 மற்றும் ரூ.8 ஆயிரத்து 350 ஆகும்.

இதுவரை சிடிஎம்ஏ வசதியுடன் சாம்சங் நிறுவனம் 9 ரக செல்போன்களை அறிமுகம் செய்திருப்பதாக விற்பனை பிரிவு சீனியர் மேனேஜர் தினேஷ் சர்மா தெரிவித்தார்.
 

                                                                                                                                                --மாலை சுடர்--