
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் கல்வியாளர் பேரா. டாக்டர் சபாபதி அவர்கள் தமிழ் சாரல் மீடியா நெட்ஒர்க்கிற்க்கு அளித்த சிறப்பு நேர்காணல்.
காகிதக் கப்பல் போல்
மறைந்தோடும் எண்ணங்கள்!
காவல் தீபத்தையே
காத்திடும் ராஜாங்கம்...!
முடிந்திட்ட நேரங்காலம்
இருளோடு விளையாடும்,
மொட்டவிழ்ந்த மலர்களெல்லாம்
தென்றலோடு கதை பேசும்!
காலத்தின் பார்வையிலே
கலைந்திட்ட பாதைகள்!
நீங்காத வடுக்களினால்,
சோர்வுற்ற சோகங்கள்!!
சோலைக் குயிலோசையில்
சூறாவளியின் சுகபயணம்!
சூரியக் கிரணங்களாய்,
என் நினைவுகளின் தேரோட்டம்!!!
அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!!
-சுமஜ்லா.