
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் கல்வியாளர் பேரா. டாக்டர் சபாபதி அவர்கள் தமிழ் சாரல் மீடியா நெட்ஒர்க்கிற்க்கு அளித்த சிறப்பு நேர்காணல்.
கொழும்பு: தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் மேதகு பிரபாகரனின் தந்தை வேலுப்பிள்ளை அவர்கள் காலமானதாக இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.
கொழும்பில் இராணுவ காவலில் வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே அவர் நேற்று இரவு காலமானதாக இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் உதய நாயணக்கார தெரிவித்துள்ளார்.
நீண்டகாலமாக பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்டிருந்த அவர், தமது 86 வது வயதில் நேற்று காலமானதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது இயற்கையான மரணம் என்றும் தனது செய்தியில் உதய நாணயக்காரா உறுதி செய்துள்ளார்.
கடந்த மே மாதம் நடைபெற்ற இறுதிக் கட்ட மோதல்களின் போது தாக்குதல் வலயத்திலிருந்து இரானுவத்தினரிடம் வந்த வேளை வேலுப்பிள்ளை மற்றும் அவரது மனைவி பார்வதி அம்மாள் ஆகியோர் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கபபட்டிருந்தனர்.
இதனையடுத்து மேலதிக விசாரணகளுக்காக இவர்கள் கொழும்புக்குக் கொண்டுவரப்பட்டனர்.
வேலுப்பிள்ளையின் உடல் யாரிடம் ஒப்படைக்கப்படும், இறுதிச் சடங்கு எங்கு நடக்கும் என்பது குறித்து தகவல்கள் ஏதும் இல்லை.
--சிவாஜி டிவி--