இரங்கல் செய்தி

த.மு.மு.க. மாநில துணைசெயலாளர் கோவை சையது அவர்களின் தாயார் மரியம் பீவி வயது 71 அம்மையார் அவர்கள் (8-01-2010) வெள்ளிகிழமை மதியம் 12 மணியளவில் மருத்துவமனையில் வஃபாத்தானார் (இன்னாலில்லாஹி வ இன்னா இலாஹி ராஜிஊன்). கரும்பு கடை பகுதியில் உள்ள அவரது வீட்டில் சமுதாயத்தனர் பார்வைக்கு வைக்கப்பட்டது.
 
மரண செய்தியை அறிந்த த மு மு க மாநில தலைவர். போரா ஜவாஹிருல்லாஹ் அவர்கள் சென்னையில் இருந்து இரவு 8-30 மணி விமான முலம் கோவை வந்தார். விமான நிலையத்தில் இருந்து நேராக கோவை சையது இல்லத்திற்கு வந்து அவராது தாயாரின் மையத்தை பார்த்து, துஆ செய்துவிட்டு கோவை சையதுக்கும் அவராது குடும்பதார்க்கும் ஆறுதல் கூறினார்.
 
அது போல் த மு மு க கோவை மாநகர செயலாளர் பாபு அவர்களின் தந்தை ஜியாவுதின் வயது 65 அவர்கள் மாலை மரணம் அடைந்தார்கள். அவரது இல்லத்திற்கும் சென்று மையத்தை பார்த்து விட்டு, பாபுவின் குடும்பத்திற்க்கும் ஆறுதல் கூறினார், துஆ செய்தார்.