மேற்கு வங்க முன்னாள் முதல்வர் ஜோதி பாசு மரணம்

கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவு காரணமாக கொல்கட்டா மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்த மேற்கு வங்க முன்னாள் முதல்வரும் மார்க்சிஸ்டு கட்சியின் முக்கிய தலைவருமான  ஜோதி பாசு இன்று சிகிச்சை பலனளிக்காமல் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 95 .

நேற்று அவரது சில முக்கிய உறுப்புகள் செயல் இழந்ததாக நேற்று மருத்துவர்கள் தெரிவித்தனர். இன்று காலை அவரது உடல்நிலை மோசமானதையடுத்து கொல்கத்தா மருத்துவமனைக்கு மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம், மேற்கு வங்க முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா , மார்க்சிஸ்டு பொலிட்பீரோ உறுப்பினர் பிருந்தா கரத் ஆகியோர் விரைந்தனர்.