
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் கல்வியாளர் பேரா. டாக்டர் சபாபதி அவர்கள் தமிழ் சாரல் மீடியா நெட்ஒர்க்கிற்க்கு அளித்த சிறப்பு நேர்காணல்.
பித்தப் பை என்பது கல்லீரலில் உற்பத்தியாகும் பித்த நீரைக் குடலுக்கு எடுத்துச் செல்லும் பித்த நாளத்தில் ஒட்டியுள்ள சிறிய பை போன்ற உறுப்பு. இது கல்லீரலின் அடிப்பாகத்தில் அமைந்துள்ளது.
பித்தப் பையில் கற்கள்: உட்கொள்ளும் உணவில் கொழுப்புச் சத்து அதிகமாக இருந்தால், உடல் பருமனாக உள்ளவர்களை, திடீரென்று உடல் இளைப்பவர்களை, கருத்தடை மாத்திரை அதிகம் உபயோகிப்பவர்களை இவ் வகைக் கற்கள் அதிகம் பாதிக்கின்றன. கொலஸ்டிரால் என்ற கொழுப்புப் பொருள் அதிகமாக உள்ளதால் இவ் வகைக் கற்கள் மஞ்சள் நிறத்தில் காணப்படும்.
பெண்கள் இதனால் அதிகம் பாதிப்புக்குள்ளாகின்றனர். ஆங்கிலத்தில் இதை "5 எஃப்' என்று கூறுவார்கள். பெண்கள் (Female), உடல் பருமனாக உள்ளவர்கள் (Fatty), வாயுத் தொல்லை உள்ளவர்கள் (Flatulent), குழந்தைப் பேறுள்ளவர்கள் (Fertile), நாற்பது வயதைச் சேர்ந்தவர்கள் (Forty).
பித்தச் சாயத்தில் இருந்து உருவாகும் பிக்மென்ட் கற்கள்: ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்கள் விரைவாக உடைவதாலோ (Haemolytic Jaundice), பித்த நீர்ப் பையில் பாக்டீயா அல்லதுகுடல்புழுக்கள் சேர்வதாலோ இக் கற்கள் உண்டாகின்றன. மூன்றாவது வகை கொல்ஸ்டிரால் மற்றும்பித்தச் சாயம் இரண்டும் சேர்ந்தது. பித்தப்பைக் கல்லுக்கும் நாம் உணவில்தவறுதலாக உட்கொள்ளும் கல்லுக்கும் சம்பந்தம் கிடையாது.
பித்தக் கற்களை அல்ட்ரா சவுண்டு சோதனை மூலம் எளிதாகக் கண்டறிய முடியும். நூறில் ஒரு சிலருக்கு மட்டும் சிடி ஸ்கேன், எம்ஆர்ஐ ஸ்கேன் தேவைப்படும்.
பித்தப் பை கற்களால் பாதிக்கப்பட்டுள்ள அனைவரும் தகுதிவாய்ந்த அறுவைச் சிகிச்சை நிபுணடம் சிகிச்சை மேற்கொள்வது நல்லது. அவ்வாறு செய்யாவிட்டால் பித்தப் பை கல் பித்த நாளத்தில் விழுந்து அடைத்துக் கொள்ளும். இதனால் மஞ்சள் காமாலை உண்டாகவும் வாய்ப்புள்ளது. இன்னும் சிலருக்கு பான்கியாட்டிஸ் pancreatis என்ற கணைய அழற்சி உண்டாகலாம்.
இது உண்டாகும்போது நோயாளிக்கு மிகக் கடினமான வலி உண்டாவதுடன் சிறுநீரகம், நுரையீரல் போன்ற உறுப்புகள் பாதிக்கும் வாய்ப்பு உள்ளது. வேறு சிலருக்கு நாள்பட்ட கற்களால் பித்தப் பையில் புற்றுநோய்க் கட்டிகள் உருவாகலாம். எனவே எந்த ஒரு நோயாளிக்கு மயக்க மருந்தைத் தாங்கிக் கொள்ளும் சக்தி உள்ளதோ அவர் உடனடியாக சிகிச்சை மேற்கொள்வது நல்லது.
குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமானால் சர்க்கரை நோய் உள்ளவர்கள் உடனடியாக சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். ஏனெனில் அவர்களுக்கு பித்தப் பை விரைவில் அழுகிவிட வாய்ப்பு உள்ளது.
பித்தப் பை கற்களுக்கு அறுவைச் சிகிச்சை...
பித்தப் பை கற்கள் நோயால் பாதிக்கப்பட்டுள்ள 100 பேருக்கு மருந்துகள் அளித்தால் 10-க்கும் குறைவானவர்களுக்கே பலன் கிடைக்கிறது. மாத்திரை சாப்பிடுவதை நிறுத்திவிட்டால் கற்கள் உடனே திரும்பவும் உற்பத்தியாகிவிடுகின்றன. இந்த மாத்திரைகள் விலை அதிகமானவை. இவற்றை நாள்பட உட்கொள்வதால் கல்லீரல் கோளாறுகள் ஏற்படவும் வாய்ப்பு உண்டு.
பிரெஞ்சு அறுவைச் சிகிச்சை நிபுணரால் அறிமுகப்படுத்தப்பட்ட லேபராஸ்கோப்பி அறுவைச் சிகிச்சை கடந்த 12 ஆண்டுகளில் மிகப் பெரிய மாற்றத்தைஏற்படுத்தி உள்ளது. இதன் மூலம் வயிற்றைக் கிழிக்காமல் மிகச் சிறிய ஊசி போன்ற துவாரங்கள் மூலம் மெல்லிய கருவிகள் மற்றும் மிகத் துல்லியமான காட்சியைத் தரும் காமிரா ஆகியவற்றை உபயோகித்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.
அறுவை சிகிச்சை முடிந்த அன்றோ, மறுநாளோ நோயாளி வீடு திரும்ப முடியும். ஓரண்டு நாள் ஓய்வுக்குப் பின் கடின உழைப்பு மேற்கொள்ள முடியும். அழுகிப்போன பித்தப் பைக்குக் கூட இந்த முறையில் சிகிச்சை அளிக்க முடியும். தற்போது புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள மினி லேபராஸ்கோப்பி, மைக்ரோ லேபராஸ்கோப்பி மற்றும் 3 சிசிடி காமிரா உதவியுடன் சிகிச்சை அளிக்கும்போது நோயாளியின் உடலில் எந்தவிதத் தையலோ தழும்போ இருப்பது இல்லை. வலி சிறிதளவும் உண்டாவதில்லை.
அறிகுறிகள்: வயிற்றின் மேல் பாகத்தில் வலது புறம் வலி, வாயுத் தொல்லை, மஞ்சள் காமாலை, கடுமையான வயிற்று வலி ஆகியவை பித்தப் பையில் கற்கள் இருப்பதற்கான அறிகுறிகள்.
--தமிழ்சிகரம்--