
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் கல்வியாளர் பேரா. டாக்டர் சபாபதி அவர்கள் தமிழ் சாரல் மீடியா நெட்ஒர்க்கிற்க்கு அளித்த சிறப்பு நேர்காணல்.
குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தின் பொருளாளர் அல்ஹாஜ் ஜி. ஸஃபியுல்லாஹ், சங்கத்தின் ஆதரவாளர் ஜனாப் ஜி. ஷம்சுத்தீன் மற்றும் குவைத் தமிழ்நாடு முஸ்லிம் கலாச்சாரப் பேரவையின் காப்பாளர் குழு உறுப்பினர் அல்ஹாஜ் ஜி. ஷர்ஃபுத்தீன் ஆகியோரின் தந்தை அல்ஹாஜ் குலாம் முஹ்யத்தீன் அவர்கள் பெரம்பலூரில் நேற்று இரவு (27.01.2010 புதன் கிழமை) தாருல் ஃபனாவை விட்டும் தாருல் பகாவை அடைந்து விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் நல்லறங்களை ஏற்றுக் கொண்டு, குற்றங்களை மன்னித்து தன்னுடைய 'ஜன்னதுல் பிர்தௌஸ்' எனும் சுவனபதியில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர் மற்றும் அன்பர்கள் அனைவருக்கும் 'ஸப்ரன் ஜமீலா' எனும் அழகிய பொறுமையை தந்தருளவும் குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) பிரார்த்தனை செய்கிறது.
உலகெங்கும் வாழும் சகோதரர்கள் அனைவரும் அன்னாரின் ஹக்கில் துஆ செய்யும்படி கேட்டுக் கொள்கின்றோம்.
தொடர்புக்கு: (+91) 9047525934
நன்றி! வஸ்ஸலாம்!!