பிரிட்டனில் மாணவர்களுக்கான விசா விதிமுறைகள் இறுக்கம்.

பிரிட்டனில் மேற்படிப்பிற்காக செல்லும் மாணவர்களுக்கென வழங்கப்படும் விசாக்களை தவறாக பயன்படுத்துகின்றனர் என எழுந்த புகார்களினால் பிரிட்டன் அரசு விசா வழங்குவதற்கான விதி முறைகளை கடுமையாக்குவதற்கான முடிவை எடுத்துள்ளதாக தெரியவருகிறது. முதற்கட்டமாக இந்திய மாணவர்களுக்கான விசா வழங்கும் நடவடிக்கை இந்தியாவில் உடனடியாக நிறுத்தப்பட்டுள்ளன. பிரிட்டனின் உள்துறை செயலாளர் ஆலன் ஜான்சன் தனது அறிக்கையில், ஐரோப்பிய யூனியன் தவிர இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து வரும் மாணவர்களுக்கு ஆங்கில புலமை உள்ளிட்ட தேர்வுகள் கடுமையாக்கப்படும் எனவும்.

பட்டப் படிப்புக்கு கீழுள்ள படிப்புகளை தேர்வு செய்யும் மாணவர்கள் வாரத்துக்கு 10 மணி நேரம் மட்டுமே வேலை செய்யலாம் எனவும். ஆறு மாதத்துக்கும் குறைவான பயிற்சி காலத்தை கொண்ட படிப்புகளுக்கு மாணவர்கள் தங்களுடன் யாரையும் அழைத்து வர முடியாதெனவும். அதேபோல், பட்டப் படிப்புக்குக் கீழுள்ளவற்றை தேர்ந்தெடுத்து படிக்கும் மாணவர்களுடன் வருபவர்கள் வேலை செய்ய அனுமதிக்கப்பட மாட்டார்கள். எனவும் தெரிவித்தார்.