நாட்டின் சகல மக்களினதும் இதயங்களை ஒன்றிணைக்க முடியும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நாட்டின் நிலபரப்புக்களை ஒன்றிணைத்ததனைப் போன்று மக்களையும் ஒன்றிணைக்க முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
ரஸ்யாவின் பீபல்ஸ் பிரன்சிப் பல்கலைக்கழகத்தினால் வழங்கப்பட்ட கௌரவ கலாநிதிப் பட்டத்தைப் பெற்றுக் கொண்டதன் பின்னர் ஆற்றிய உரையின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பயங்கரவாதத்தை இல்லாதொழித்து, சமாதானத்தை நிலைநாட்டும் முயற்சி தனித்து மேற்கொள்ளப்படவில்லை எனவும், நாட்டின் சகல மக்களினதும் ஒத்துழைப்பு தமக்குக் கிட்டியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
உலகின் மிகக் கொடிய பயங்கரவாத அமைப்புக்களின் ஒன்றான விடுதலைப் புலிகள் கடந்த மூன்று தசாப்த காலமாக நாட்டு மக்களை பல்வேறு வழிகளில் அச்சுறுத்தி வந்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நேர்மையான சமாதான முன்னெடுப்புக்களை புலிகள் உதாசீனம் செய்ததன் காரணமாக மிகவும் நிதானமாக மனிதாபிமான மீட்பு யுத்தம் ஆரம்பிக்கப்பட்டதாகவும், சிவிலியன் பாதுகாப்பு உச்சளவில் உறுதிப்படுத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
--பாரிஸ்தமிழ்--