இந்திய ஹாக்கி வீரர் முஸ்தாக் அலி மரணம்

போபால்: இந்திய ஹாக்கி வீரரும் ஒலிம்பியனுமான ‘பர்ஸான் சாச்சா’ என்ற சையது முஸ்தாக் அலி (57), புற்றுநோய் காரணமாக நேற்று இறந்தார். 1964ம் ஆண்டு நடந்த ஒலிம்பிக் ஹாக்கி போட்டியில் (டோக்கியோ, ஜப்பான்) தங்கப் பதக்கம் வென்ற இந்திய அணியில் இவர் விளையாடி உள்ளார். பிஎஸ்என்எல் நிறுவன ஊழியரான இவர் அந்த அணிக்காக பல தேசிய போட்டிகளிலும் விளையாடி உள்ளார்.சமீபத்தில் மத்தியப் பிரதேச அணியின் பயிற்சியாளராகத் தேர்வு செய்யப்பட்ட இவர், உடல்நிலை மோசமானதால் அந்த பணியை ஏற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது