
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் கல்வியாளர் பேரா. டாக்டர் சபாபதி அவர்கள் தமிழ் சாரல் மீடியா நெட்ஒர்க்கிற்க்கு அளித்த சிறப்பு நேர்காணல்.
புதுடெல்லி : உலக கோப்பை ஹாக்கி போட்டியில் தென் ஆப்ரிக்காவுடன் மோதிய ஆஸ்திரேலியா 12&0 என்ற கோல் கணக்கில் வென்று புதிய சாதனை படைத்தது.பி பிரிவில் நேற்று நடந்த இப்போட்டியில், தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய ஆஸ்திரேலியா அடுத்தடுத்து கோல் அடித்து அசத்தியது. இடைவேளையின்போது 5&0 என முன்னிலை வகித்த ஆஸி அணி, இரண்டாவது பாதியில் மேலும் 7 கோல்களை அடித்தது. அந்த அணி உலக கோப்பை ஆட்டத்தில் மிகப் பெரிய வெற்றியை (12&0) பதிவு செய்து சாதனை படைத்தது.
முன்னதாக, 1982ல் நடந்த உலக கோப்பையில் பாகிஸ்தான் 12&3 என்ற கோல் கணக்கில் நியூசிலாந்தை வீழ்த்தியிருந்தது. ஆஸி. வீரர் லூக் டோயர்னர் 5 கோல் அடித்தார். வையர், டர்னர் தலா 2, அப்பாட், கவனாக், பெட்டுரினி தலா ஒரு கோல் போட்டனர்.மற்றொரு ஆட்டத்தில் இங்கிலாந்து 5&2 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தியது.