
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் கல்வியாளர் பேரா. டாக்டர் சபாபதி அவர்கள் தமிழ் சாரல் மீடியா நெட்ஒர்க்கிற்க்கு அளித்த சிறப்பு நேர்காணல்.
தினந்தோறும் தானாகவே கதவைத்திறந்து கொண்டு மூக்கை நாசம் செய்யும் சாமியாகளின் அட்டகாசம் ஓய மறுக்கின்றது.
நித்யானந்தா “சுவாமி”, 36 வயதுடைய ராஜசேகர் எனும் இயற் பெயரைக் கொண்ட ஒரு ஆசாமி. தனது ஆசிரமத்தில் பிரபல தமிழ் நடிகை ரஞ்சிதாவுடன் சயனித்திருந்த சல்லாபக் காட்சிகளை சன் தொலைக்காட்சியும் அதன் செய்தி தொலைக்காட்சியும் ஒளிபரப்ப “சுவாமி” யின் பக்தர்களை பரவச நிலைக்கு அழைத்துச் சென்றுள்ளது.
ஏமாற்றப்பட்டதாக உணர்ந்த சில பக்தகோடிகள் தங்களால் பூஜிக்கப்பட்ட “சுவாமி”யின் படங்களை செருப்பால் அடித்தும், காலால் மிதித்தும் தங்களின் இயலாமயை, அறியாமையை மீண்டும் நிரூபித்துள்ளார்கள்.
சல்லாப லீலா வினோதங்கள் அவற்றிற்கான காணொளிக்காட்சிகள். செய்தித் தொகுப்புகள், விமர்சனங்கள், ஆக்கங்கங்கள், ஆத்திர ஆவேசங்கள் என சம்ரதாயாமாகிபோன இந்த அவலங்களை அதன் அடிமுடி ரகசியத்தை காணவும், கண்டுபிடிக்கவும் யாரும் தயாரில்லை.
இது உடல் சம்பந்தப்பட்ட சபலமோ, பொருள் சம்பந்தப்பட்ட பேராசையோ அல்ல. அதை செய்து அம்பலப்பட்டவர்கள் ஆட்டோ சங்கர், கன்னட பிரசாத் போன்றிருப்பார்கள். இவர்களிடம் சிக்குபவர்கள் ஏமாறுபவர்களோ, ஏமாற்றுபவர்களோ அல்ல. தெரிந்தும், ஏற்றும் கொள்பவர்கள்.
ஆனால் புதிய வரவான நித்யானந்தாவாயினும், பழங்கதையாகிப்போன தேவனாதன், கா(ம)கோடி ஜெயேந்திரர், சாய்பாபா, இப்படி அனுமன் வால்போல் நீளும் பட்டியலில் அணிவகுக்கும் யாராயினும் அவர் சபலக்காரர்கள் அல்ல, பேராசைக் காரர்களோ அல்ல. மாறாக மக்களின் உள்ளத்தை, எண்னத்தை ஆக்கிரமித்து ஆளுமை செய்யும் தந்திரக்காரர்களும் அல்ல மாறாக அயோக்கியர்கள்.
மக்களின் அலைபாயும் மனத் தேடல்களுக்கு உள்ள ஆர்பரிப்புகளுக்கு நாங்கள் வழிக்காட்டுகிறோம் என புறப்படும் போக்கிரிகளின் மூலதனம் கடவுள். கடவுள் குறித்து இப்போக்கிரிகள் உருவாக்கும் சொல்லோவிய கருத்தாக்கம் பல மனிதர்களின் இடைக்கால நிவாரணமாய் மாறி விடுவதால், இந்த சாமியார்கள் தங்களை துறவியென்றும், அவதாரங்களென்றும் அழைத்துக் கொள்கிறார்கள்.
இவர்களின் இந்த செயல்களை இவர்கள் முன் விரிந்துக் கிடக்கும் கடவுள் சார்ந்த கற்பனைகளும், கதைகளும் பெரும் பலமான ஆதாரமாக மாறிவிடுகின்றது. கடவுளைத் தேடும் பக்தர்கள் ஒருநாளும் தங்கள் முன்னால் நிற்கும் கல்லை சோதித்துப் பார்ததில்லை. ஏன் சோதிக்க எண்ணியதுமில்லை. இதன் விபரிதம் இது போன்ற அயோக்கியர்களால் நன்கு பயன்படுத்தப்படுகின்றது.
நித்யானந்தா என்ற இந்த ஆசாமி தன்னிடம் பிள்ளையார்? முன் வந்து பேசியதாக கதை விடுகின்றான். அந்த கதைக்கு அதாரமாய் கடந்த கால நம்பியாண்டார் என்பவரின் கதையைச் சொல்கிறான். மக்கள் உடனே சொக்கிப்போகிறார்கள். இந்த மனமயக்கம்தான் நித்யானந்தா, கா(ம)கோடி ஜெயேந்திரர் போன்ற அயோக்கியர்களுக்கு அடித்தளமாகிறது.
இவர்கள் தங்களின் உபன்யாசங்களுக்கு உதாரனமான நூற்களாக பயன்படுத்தும் ராமாயணம், பகவத்கீதை போன்ற இதிகாச கட்டுக்கதை புராணங்கள் மற்றும் சூத்திரங்கள் எல்லாம் சாமான்ய மனிதன் வெட்கித் தலைக்குனியக் கூடிய சல்லாபங்களும், சரசங்களும் நிறைந்தவைகளாகத்தான் உள்ளது. இவர்கள் வணங்குவதாக கூறும் கடவுள்களும் இவர்களைப்போன்று ஒழுக்ககேடர்களாகவே உள்ளனர்.
சாமி சிலைக்கு முன்னால் சல்லாபம் செய்யும் இவர்களுக்குத் தெரியும் சிலை, அது வெறும் சிலைதான். கடவுளோ, கடவுளின் வடிவமோ அல்ல.
ஆனால் தாங்களின் உபன்யாசத்தில் நாங்கள் சிலையாக எதையும் பார்பதில்லை. ஆதலால் பிள்ளையார் சிலை எனவும் அழைப்பதில்லை என்றகிறார்கள். மக்கள் மகுடிக்கு மயங்கிய பாம்பாய் உருக்குலைந்து நிற்கிறார்கள். தங்களின் செல்வங்களை இந்த அயோக்கியர்களின் பாதங்களில் கொட்டுகிறார்கள்; போக்கிரிகள் உல்லாச புரியில் சல்லாப சரசங்களோடு உலா வருகிறார்கள்.
இந்த தந்திரக்காரர்கள் மக்களை தக்கவைத்துக் கொள்ள, அவ்வப்போது பிள்ளையார் பால் குடித்தார், அம்மன் கண் சிமிட்டினாள், அரசமரத்தில் அம்மன்முகம் எனவும், விபூதி முதல் லிங்கம் வரை வரவழைக்கவும் செய்வார்கள்.
எல்லாம் பொய், பொய்யைத் தவிர வேறில்லை என மக்களின் முன் நிரூபனமாகியுள்ளது.
இது மக்களுக்கான தருணம்.....
உண்மையை உணர.... உணர்ந்தபடி செயல்பட....
கல்லாய் வீற்றீருந்த சிலைகள் கடவுளாயிருந்தால் தேவநாதனின், கா(ம)கோடி ஜெயேந்திரனின் காமவேட்டைகளை காண சகியாது கருவறையை காலி செய்திருக்கும். ஆனால் காலி செய்யாது வைத்த இடத்தில் வைத்ததுபோல் கல்லாயிருந்து நான் கடவுள் இல்லை என நிரூபித்துள்ளது. ஆதலால் நித்யானந்தம் போன்ற போக்கிரிகளின் சாமர்த்தியங்களுக்குள் சிக்காது, சிதையாது வாழ கடவுள் வேண்டும் என்றால்.....
அப்படித்தேடும் கடவுள் இருந்தால்......
அந்தக் கடவுள், கல்லாய் மரமாய் உருவமாய் வடிவமாய் இருத்தல் கூடாது.
கடவுள் அவதாரமாய் காமுகனாய் உண்பவனாய் உறங்குபவனாய் இருத்தல் கூடாது.
கடவுள், கட்டிய மனைவி தொட்டில் குழந்தை என இருத்தல் கூடாது.
ஒட்டு மொத்ததில் கடவுள் என்னும் சொல்லிற்கேற்ப எல்லா பலவீனங்களையும் கற்பனைகளையும் கடந்த எல்லாம் வல்லோனாய் இருத்தல் வேண்டும். மக்களின் மனமும் எண்ணமும் தேடி அலையும் உண்மை கடவுள் கிடைக்கட்டும்.
அமைதிக்கும் அடைக்களத்திற்கும் அதன் மூலம் வழிபிற்க்கட்டும்.
போலிகளின், போக்கிரிகளின் பிடியிலிருந்தும் மாயவலையிலிருந்தும் மக்களுக்கு விடுதலை கிடைக்கட்டும்
- அன்புச் செல்வன்