
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் கல்வியாளர் பேரா. டாக்டர் சபாபதி அவர்கள் தமிழ் சாரல் மீடியா நெட்ஒர்க்கிற்க்கு அளித்த சிறப்பு நேர்காணல்.
கொழும்பு: இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள், துஷ்பிரயோகம் தொடர்பில் ஆலோசனை வழங்குவதற்காக நிபுணர்கள் குழுவொன்றை ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் நியமிக்கவிருப்பதாக அவரது பேச்சாளர் கடந்த வெள்ளிக்கிழமை தெரிவித்தார். கடந்த வியாழக்கிழமை மாலை இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் தொடர்பு கொண்ட பான் கீ மூன், ஆலோசனைக் குழுவின் அடிப்படையில் செயற்பட தாம் உத்தேசித்திருப்பதாகத் தெரிவித்துள்ளார் எனவும் மார்ட்டின் நெகிர்சி என்ற அப்பேச்சாளர் குறிப்பிட்டார்.
இலங்கை தொடர்பில் பொறுப்பான விவகாரங்கள் குறித்து அந்தக் குழு தனக்கு ஆலோசனை வழங்கும் என்று அவர் தனது உரையாடலில் விளக்கியுள்ளார் என்றார் நெகிர்சி. சிறுபான்மை தமிழ் மக்களுக்காக தனித் தாயகம் ஒன்றை உருவாக்க நோக்கம் கொண்டு 25 வருட காலம் போராடி வந்த தமிழீழ விடுதலைப் புலிகளுடனான யுத்தத்தின் இறுதி மாதங்களில் ஆயிரக்கணக்கான பொது மக்கள் கொல்லப்பட்டமைக்கு பொறுப்புக் கூறக் கடமைப்பட்டுள்ளதாக இலங்கை மீது மனித உரிமைகள் அமைப்புகளும் மேற்கு நாடுகளும் அழுத்தம் கொடுத்து வருகின்றன.
நீண்ட யுத்தத்தின் போது மனித உரிமைமீறல்கள் மற்றும் அக்கிரமங்கள் இரு தரப்பினாராலும் மேற்கொள்ளப்பட்டுள்ளனவென குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த நிபுணர்கள் குழு, மனித உரிமைகள் அமைப்புக் குழுக்கள் விரும்பும் அளவுக்குச் செல்வார்களா என்பது தெளிவாகத் தெரியவில்லை. அந்த அமைப்புகள் யுத்த காலத்தின் இறுதிக் கட்டத்தில் ஏற்பட்ட யுத்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக இலங்கை அரசாங்கத்தையும் விடுதலைப் புலிகளையும் குற்றஞ் சாட்டியுள்ளதோடு இந்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டுமெனவும் கோரியிருந்தன. இதனை ஐக்கிய நாடுகளின் சித்திரவதைகள் மற்றும் சட்டவிரோத கொலைகள் தொடர்பான விசேட பிரதிநிதி பிலிப் அல்ஸ்டன் வலியுறுத்தியிருந்தார்.
வேண்டுமென்றே பொது மக்கள் மீது இலக்கு வைக்கப்பட்டு கொல்லப்பட்டமை மற்றும் ஏனைய மனித உரிமைகள் மீறல் குற்றச்சாட்டுக்களை இலங்கை அரசு நிராகரித்தது. தமிழ் புலிகளை தோற்கடித்து வெற்றி கொண்டதை அரசாங்கம் மே 2009 இல் பிரகடனம் செய்தது. பான் முன்னர் இலங்கைக்கு தாம் ஆலோசனைக் குழுவொன்றை ஏற்படுத்த ஆலோசிப்பதாகவும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சாத்தியமான நடவடிக்கைகள் எடுப்பதில் இலங்கைக்கு உதவவுள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார் என நெகிர்சி கூறினார்.
""குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் வெளியாக உதவியுடன் இலங்கை சுய விசாரணை நடத்த வேண்டுமென ஜெனிவாவில் மனித உரிமைகளுக்கான உயர் ஸ்தானிகர் திருமதி நவநீதம்பிள்ளை கோரியிருந்தார்.
யுத்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பான விசாரணையை அவரே மேற்கொள்ள வேண்டும்'' என பான் கூறியுள்ளார். ""யுத்தத்தின் போது சகல பக்கங்களாலும் பாரிய மீறல்கள் ஏற்பட்டுள்ளன என்பதை இலங்கை ஏற்றுக் கொள்ள வேண்டுமென நான் கருதுகிறேன். இந்த விடயத்தில் சர்வதேச சமூகம் உதவக் கூடியதாக இருக்கும்'' என்று ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் சபையில் கடந்த வியாழக்கிழமை உரையாற்றுகையில் மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர் ஸ்தானிகர் நவதீதம்பிள்ளை தெரிவித்திருந்தார்