அரையிறுதியில் ஆஸ்ட்ரேலிய அணி

புதுடெல்லி: தலைநகர் புதுடெல்லியில் நடந்து வரும் ஹீரோ ஹோண்டா உலகக்கோப்பை ஹாக்கியில் இன்று நடந்த பி-பிரிவு லீக் ஆட்டத்தில் ஸ்பெயின் அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்கு ஆஸ்ட்ரேலிய அணி முன்னேறியுள்ளது.

ஹீரோ ஹோண்டா 12வது உலகக்கோப்பை ஆண்கள் ஹாக்கி போட்டி டெல்லியில் நடந்து வருகிறது. போட்டியின் 7வது நாளான இன்று பி-பிரிவு லீக் ஆட்டங்கள் நடந்து வருகின்றன.

சற்று முன்னர் நடந்து முடிந்த முதல் போட்டியில் பலம் வாய்ந்த ஆஸ்ட்ரேலிய அணியை எதிர்த்து ஸ்பெயின் விளையாடியது. இதில் முதல் பாதியில் ஒரு கோல் போட்டு முன்னிலை பெற்ற ஆஸ்ட்ரேலியா, 2வது பாதியில் மீண்டும் ஒரு கோல் அடித்து, 2-0 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் ஆஸ்ட்ரேலிய அணி அரையிறுதிக்குத் தகுதி பெற்றது.