
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் கல்வியாளர் பேரா. டாக்டர் சபாபதி அவர்கள் தமிழ் சாரல் மீடியா நெட்ஒர்க்கிற்க்கு அளித்த சிறப்பு நேர்காணல்.
மகளிருக்கான இடஒதுக்கீடு அளிக்கும் மசோதாவில் உள்ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற தங்களின் கோரிக்கையை ஏற்காத காரணத்தால் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை சமாஜ்வாடி, ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சிகள் திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளன.
இதுகுறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய லாலு பிரசாத், “மகளிர் இடஒதுக்கீட்டு மசோதாவை உள்ஒதுக்கீடு இன்றி நிறைவேற்றுவது அரசியல் ஏமாற்றுத்தனம். இதனை நாங்கள் ஏற்க மாட்டோம். எனவே, மத்திய அரசுக்கு அளித்து வரும் ஆதரவை திருமப் பெறுகிறோம்” என்றார். அப்போது முலாயம் சிங் உடனிருந்தார்.
மகளிருக்கு 33% இடஒதுக்கீடு அளிக்கும் மசோதாவில், பிற்படுத்தப்பட்டோர், தலித் பிரிவைச் சேர்ந்த பெண்களுக்கு உள்ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என சமாஜ்வாடி, ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சிகள் கோரியிருந்தன. ஆனால் அதனை ஏற்காத மத்திய அரசு மகளிர் மசோதாவை இன்று மாநிலங்களவையில் தாக்கல் செய்ய உள்ளது.
மக்களவையில் சமாஜ்வாடிக்கு 21 உறுப்பினர்களும், ராஷ்ட்ரிய ஜனதா தளத்திற்கு 4 உறுப்பினர்களும் உள்ளனர். அரசுக்கு வெளியில் இருந்து அளித்து வரும் ஆதரவை இரு கட்சிகளும் விலக்கிக் கொண்ட போதிலும் காங்கிரஸ் கூட்டணிக்கு உள்ள பெரும்பான்மை பலம் பாதிக்கப்படாது என்பது குறிப்பிடத்தக்கது.