
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் கல்வியாளர் பேரா. டாக்டர் சபாபதி அவர்கள் தமிழ் சாரல் மீடியா நெட்ஒர்க்கிற்க்கு அளித்த சிறப்பு நேர்காணல்.
புதுடெல்லி: உள்நாட்டு, வெளிநாட்டு பயண கட்டணங்களில் 10 முதல் 50 சதவீத தள்ளுபடி வழங்க ஏர் இந்தியா முன்வந்துள்ளது.இதன்படி முதல் வகுப்பு பயணிகளுக்கு அடிப்படைக் கட்டணத்தில் 50 சதவீத தள்ளுபடி அனுமதிக்கப்படும். அமெரிக்கா, கனடா, பிரிட்டன், ஐரோப்பா, டோக்கியோ, ஜெத்தா, ரியாத் ஆகிய நாடுகளுக்கு செல்லும் பயணிகள் பயன் பெறுவார்கள்.
லண்டன் ஹீத்ரு விமான நிலையத்துக்கு டெல்லியிலிருந்து புறப்பட்டுத் திரும்பும் முதல் வகுப்புப் பயணி ஒருவருக்கு குறிப்பிட்ட நாளில் அடிப்படைக் கட்டணம் ரூ.3 லட்சம் என்றால், தள்ளுபடி போக அவர் செலுத்த வேண்டிய தொகை ரூ. 1.5 லட்சம்.அமெரிக்கா, கனடா, பிரிட்டன், ஐரோப்பா, டோக்கியோ, ஜெத்தா, ரியாத் ஆகிய நாடுகளுக்கும் ஹாங்காங், ஷாங்காய், சிங்கப்பூர், துபாய் ஆகிய நாடுகளுக்கும் எக்ஸிகியூடிவ் வகுப்பில் செல்லும் பயணிகள் அடிப்படைக் கட்டணத்தில் 40 சதவீத தள்ளுபடி பெறலாம்.
கடந்த சனிக்கிழமை இதற்கான அறிவிப்பு வெளியானது. பயண டிக்கெட்டுகள் மார்ச் 8ம் தேதி முதல் 13ம¢ தேதிக்குள் வாங்கப்பட்டதாகவும் பயணம் மார்ச் 15 முதல் ஜூன் 30ஆம் தேதிக்குள் அமைவதாகவும் இருக்க வேண்டும். ஏர் இந்தியா இணைய தளத்தில் பெறப்பட்ட உள்நாட்டு வெளிநாட்டுப் பயணங்களுக்கான எகானமி வகுப்பு டிக்கெட்டுக்கும் அடிப்படைக் கட்டணத்தில் 10 சதவீத டிஸ்கவுண்ட் அனுமதிக்கப்படும். இந்தியாவிலிருந்து மார்ச் 9ஆம் தேதி முதல் ஏப்ரல் 30ஆம் தேதிக்குள் புறப்படும் எல்லா வெளிநாட்டுப் பயணங்களுக்கும் உள்நாட்டுப் பயணங்களுக்கும் இந்த 10 சதவீத தள்ளுபடி அனுமதிக்கப்படும்.