டேவிஸ் கோப்பை :உலக குழுவில் இருந்து வெளியேறியது இந்தியா!

டெல்லி, மார்ச்.8: ரஷ்யாவுக்கு எதிரான டேவிஸ் கோப்பை போட்டியில் இந்தியா தோல்வி அடைந்து உலக குழுவில் இருந்து வெளியேறியது. 

இந்தியா மற்றும் ரஷ்யா இடையிலான டேவிஸ் கோப்பை போட்டியில் நேற்று நடைபெற்ற முதல் மாற்று ஒற்றையர் ஆட்டத்தில் இந்தியாவின்  சோம் தேவ் வர்மன், ரஷ்யாவின் மிக்கேல் யுஸ்னியிடம் தோல்வி யடைந்தார்.
இதனையடுத்து ரஷ்யா 31 என வெற்றி பெற்று காலிறுதிக்கு தகுதி பெற்றது. இந்த தோல்வியையடுத்து இந்தியா டேவிஸ் கோப்பையில் 16 நாடுகள் இடம்பெறும் உலக சுற்றில் இருந்து வெளியேறியது.

இதன் காரணமாக இந்தியா இனி தகுதிச் சுற்று ஆட்டங்களில் பங்கேற்று பிரதான சுற்றுக்கு முன்னேற வேண்டும். இந்த போட்டியில் இரட்டையர் பிரிவில் இந்தியா வெற்றி பெற்றது.

பின்னர் கடைசியாக நடைபெற்ற மாற்று ஒற்றையர் போட்டியில் இந்தியாவின் போபன்னா வெற்றி பெற்றார்.