
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் கல்வியாளர் பேரா. டாக்டர் சபாபதி அவர்கள் தமிழ் சாரல் மீடியா நெட்ஒர்க்கிற்க்கு அளித்த சிறப்பு நேர்காணல்.
மேட்டுப்பாளையத்தில் தனியாருக்கு சொந்தமான நூற்பாலையில் இன்று ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ரூ.5 கோடி மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானதாக கூறப்படுகிறது.
ஆந்திரா, மராட்டிய மாநிலங்களில் இருந்து இந்த நூற்பாலைக்கு துணிகள் தயாரிக்க தேவையான மூலப் பொருளான பஞ்சுகள் இறக்குமதி செய்யப்படுகிறது. இந்த நூற்பாலையையொட்டி குடோன் ஒன்று உள்ளது. அதில் நூல், பஞ்சு பேல்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தாக தெரிகிறது.
இன்று அதிகாலை 2 மணியளவில் குடோனில் இருந்து கரும்புகை வந்துள்ளது. இதனை வேலை செய்த தொழிலாளர்கள் பார்த்து உடனடியாக நிர்வாகத்தினருக்கு தெரிவித்துள்ளனர். அவர்கள் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தின் பேரில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
அதற்குள் தீ மள மளவென்று குடோன் முழுவதும் பரவியது. இதில் ஜன்னல் கண்ணாடிகள் வெடித்து சிதறியது. சுவரிலும் விரிசல் ஏற்பட்டுள்ளதால் எந்த நேரத்திலும் குடோன் இடிந்து விழும் நிலையில் இருக்கிறது.
தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். இந்த தீ விபத்தில் ரூ. 5 கோடி மதிப்புள்ள பொருட்கள் சேதமடைந்ததாக கூறப்படுகிறது.
தீ விபத்து ஏற்பட்டவுடன் தொழிலாளர்கள் வெளியேறி ஓடி விட்டதால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. இந்த தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லை. இது குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.