
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் கல்வியாளர் பேரா. டாக்டர் சபாபதி அவர்கள் தமிழ் சாரல் மீடியா நெட்ஒர்க்கிற்க்கு அளித்த சிறப்பு நேர்காணல்.
மும்பை: மும்பையில் போலீஸ் வேலைக்கான ஆட்கள் தேர்வு முகாமில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி ஒருவர் உயிரிழந்தார்; 11 பேர் காயமடைந்தனர்.
மகாராஷ்டிரா போலீசில் 3,600 போலீஸ் கான்ஸ்டபிள் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதற்கான ஆட்கள் தேர்வு முகாம், மும்பை கலினா மைதானத்தில் நேற்று நடந்தது. இந்த முகாமில் பங்கேற்க மாநிலத்தின் பல்வேறு இடங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் நேற்று காலை வந்து குவிந்தனர். மைதானத்தின் நுழைவாயில் திறக்கப்பட்டதும், அவர்கள் வேகமாக உள்ளே நுழைய முயன்றனர். சிலர், தடுப்புக் கட்டைகள் மீது ஏறிக் குதித்து, ஒருவர் மீது ஒருவர் விழுந்து மைதானத்தின் உள்ளே புகுந்தனர். இதனால், கூட்டத்தில் கடும் நெரிசல் ஏற்பட்டது. இந்த நெரிசலில் சிக்கி ஒருவர் உயிரிழந்தார்; 11 பேர் காயமடைந்தனர். இதுகுறித்து விசாரணை நடத்த கூடுதல் போலீஸ் கமிஷனர் அமிதாப் குப்தா