
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் கல்வியாளர் பேரா. டாக்டர் சபாபதி அவர்கள் தமிழ் சாரல் மீடியா நெட்ஒர்க்கிற்க்கு அளித்த சிறப்பு நேர்காணல்.
பென்னாகரம்: பென்னாகரம் சட்டசபை இடைத்தேர்தலுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் நாளை மறுநாள் வெளியாகும் என தெரிகிறது.
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் வரும் 27-ஆம் தேதி நடக்கிறது. பல்வேறு கட்சியினரும் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். பென்னாகரம் தொகுதியில் பென்னாகரம் ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த 33 ஊராட்சிகள், நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த 15 ஊராட்சிகள், பென்னாகரம், பாப்பாரப்பட்டி ஆகிய 2 பேரூராட்சிகள் உள்ளன. சமீபத்தில் வெளியான வாக்காளர் பட்டியலின்படி, பென்னாகரம் தொகுதியில் மொத்தம் 1,98,525 வாக்காளர்கள் உள்ளனர். ஆண் - 1,01,695, பெண் - 96,830. இதில் விடுபட்டவர்கள், முகவரி மாறியவர்கள், புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டு வருகின்றனர். இறுதி வாக்காளர் பட்டியல் நாளை மறுநாள் வெளியாகும் என தெரிகிறது.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், “சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படாத வகையில் பாதுகாப்பு பணிகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. தமிழக துணை முதல்வர், அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, விஜயகாந்த் உள்ளிட்ட தலைவர்கள் 19-ஆம் தேதிக்கு பிறகு பிரசாரம் செய்ய உள்ளனர். அதற்கு வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தேர்தல் பாதுகாப்புக்கு மத்திய அரசின் 5 கம்பெனி படையினர் ஓரிரு நாளில் வருகின்றனர்” என்றனர்.
தேர்தலை கண்காணிக்க 2 பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில் சஞ்சய் ஆர் பூஸ்ரெட்டி நேற்று மதியம் தர்மபுரிக்கு வந்தார். அவரை மாவட்ட தேர்தல் அதிகாரியும் கலெக்டருமான அமுதா வரவேற்று தொகுதி விவரங்களை விளக்கினார். பென்னாகரம், பாப்பாரப்பட்டியில் அதிக பதற்றமான வாக்குச்சாவடி மையங்களுக்கு அவர் இன்று மாலை சென்று பார்வையிடுகிறார். மற்றொரு பார்வையாளர் அகூஜா நாளை மறுநாள் வருகிறார்.
தேர்தலை கண்காணிக்க 2 பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில் சஞ்சய் ஆர் பூஸ்ரெட்டி நேற்று மதியம் தர்மபுரிக்கு வந்தார். அவரை மாவட்ட தேர்தல் அதிகாரியும் கலெக்டருமான அமுதா வரவேற்று தொகுதி விவரங்களை விளக்கினார். பென்னாகரம், பாப்பாரப்பட்டியில் அதிக பதற்றமான வாக்குச்சாவடி மையங்களுக்கு அவர் இன்று மாலை சென்று பார்வையிடுகிறார். மற்றொரு பார்வையாளர் அஹுஜா நாளை மறுநாள் வருகிறார்.