
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் கல்வியாளர் பேரா. டாக்டர் சபாபதி அவர்கள் தமிழ் சாரல் மீடியா நெட்ஒர்க்கிற்க்கு அளித்த சிறப்பு நேர்காணல்.
கொழும்பு: தனது மகள்களுடன் தொலைபேசியில் பேச அனுமதி அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து தனது உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிட்டார் பொன்சேகா.
ராணுவத்தின் பிடியில் அடைபட்டுள்ள பொன்சேகா தனது மகள்களுடன் பேச செல்போன் வைத்துக் கொள்ள அனுமதிக்கப்பட்டிருந்தார்.
ஆனால் திடீரென ராணுவத்தினர் செல்போனை பறிமுதல் செய்து விட்டனர். இதனால் கொதித்துப்போன பொன்சேகா உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்தார்.
இதுகுறித்து ராணுவ செய்தித் தொடர்பாளர் பிரசாத் சமரசிங்கேவிடம் கேட்டபோது அப்படியா, தெரியாதே என்று பொத்தாம் பொதுவாக மறுத்திருந்தார்.
இந்த நிலையில் தற்போது பொன்சேகாவிடம் மீண்டும் போன் கொடுக்கப்பட்டு விட்டதாம். மகள்களுடன் பேசவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாம்.இதையடுத்து பொன்சேகா தனது போராட்டத்தைக் கைவிட்டுள்ளாராம்.
இதுகுறித்து சமரசிங்கே கூறுகையில், பொன்சேகா தனது இரு மகள்களுடன் உரையாட ராணுவம் அனுமதி வழங்கியுள்ளது.
அதேசமயம், பொன்சேகா தனது இரு மகள்களுடன் மட்டுமே பேச முடியும். அதற்கான அனுமதி மட்டுமே அவருக்கு வழங்கப்பட்டுள்ளது என்று கூறினார்.