
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் கல்வியாளர் பேரா. டாக்டர் சபாபதி அவர்கள் தமிழ் சாரல் மீடியா நெட்ஒர்க்கிற்க்கு அளித்த சிறப்பு நேர்காணல்.
புதுடெல்லி : உலக கோப்பை ஹாக்கி போட்டியில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் நியூசிலாந்தை 5-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய ஜெர்மனி அரை இறுதிக்கு முன்னேறியது.ஏ பிரிவில் நடந்த இப்போட்டியில், தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய ஜெர்மனி அணி அடுத்தடுத்து கோல் அடித்து அசத்தியது. இடைவேளையின்போது அந்த அணி 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது.பரபரப்பான ஆட்டத்தின் முடிவில் ஜெர்மனி 5-2 என்ற கோல் கணக்கில் வென்றது. ஜெர்மனி 5 போட்டிகளில் 11 புள்ளிகளுடன் (3 வெற்றி, 2 டிரா) அரை இறுதி வாய்ப்பை உறுதி செய்தது. நியூசிலாந்து 6 புள்ளிகளுடன் ஏ பிரிவில் 4வது இடத்துக்கு தள்ளப்பட்டது.மற்றொரு லீக் ஆட்டத்தில் கொரியா நெதர்லாந்து அணிகள் மோதின. மிகவும் விறுவிறுப்பாக அமைந்த இப்போட்டியில், இடைவேளையின்போது இரு அணிகளும் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலை வகித்தன. இரண்டாவது பாதியின் கடைசி கட்டத்தில் அபாரமாக கோல் அடித்த கொரிய அணி 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது.ஏ பிரிவில் இரு அணிகளுமே தலா 10 புள்ளிகள் பெற்றாலும், கோல் வித்தியாச அடிப்படையில் நெதர்லாந்து 2வது இடம் பிடித்து அரை இறுதிக்கு முன்னேறியது.