சென்செக்ஸ் 50 புள்ளிகள் சரிவு

மும்பை: இந்தியப் பங்குச்சந்தைகளில் இன்று சரிவு காணப்பட்டது.

மும்பை பங்குச்சந்தையில் இன்றைய வர்த்தக முடிவில் குறியீட்டெண் சென்செக்ஸ் 50 புள்ளிகள் சரிந்து 17,052 புள்ளிகளில் முடிவடைந்தது.

ரிலையன்ஸ் இன்ஃப்ரா, ஹீரோ ஹோண்டா, ஸ்டெர்லைட் இன்டஸ்ட்ரீஸ், ஓஎன்ஜிசி, ஏசிசி உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலையில் சரிவு ஏற்பட்டது.

ஐசிஐசிஐ வங்கி, டிசிஎஸ், இன்ஃபோசிஸ், ஐடிசி, மஹேந்திரா அன்ட் மஹேந்திரா உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலையில் ஓரளவு ஏற்றம் காணப்பட்டது.

தேசியப் பங்குச்சந்தையில் இன்றைய வர்த்தக முடிவில் குறியீட்டெண் நிஃப்டி 23 புள்ளிகள் சரிந்து 5,101 புள்ளிகளில் முடிவடைந்தது.