
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் கல்வியாளர் பேரா. டாக்டர் சபாபதி அவர்கள் தமிழ் சாரல் மீடியா நெட்ஒர்க்கிற்க்கு அளித்த சிறப்பு நேர்காணல்.
தர்மபுரி: ""தி.மு.க.,வினர் திட்டமிட்டு போலீஸாரை கொண்டு பா.ம.க.,வினரை தாக்கி வருவதால், தேர்தல் அமைதியாக நடக்குமா என்று சந்தேகம் ஏற்பட்டுள்ளது,'' என பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார். பென்னாகரம் தொகுதிக்கு உட்பட்ட இண்டூர் அக்ரஹாரம் செக்போஸ்ட் வழியாக நேற்று முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி வந்த வாகனத்தை சோதனையிட போலீஸார் நிறுத்தினர். அப்போது, போலீஸாருக்கும், பா.ம.க.,வினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. தடியடி நடத்தி பா.ம.க.,வினரை போலீஸார் விரட்டினர்.
காயம் அடைந்தவர்கள் தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அவர்களை சந்தித்து ஆறுதல் கூறிய பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், நிருபர்களிடம் கூறியதாவது: பென்னாகரம் தொகுதியில் உணவுத்துறை அமைச்சர் வேலு கட்டுப்பாட்டிலும், அவரது வழிகாட்டுதல்படியும் போலீஸார் செயல்படுகின்றனர். தேர்தலை நேர்மையாகவும், அமைதியாகவும் நடத்த பா.ம.க.,வும், நானும் எல்லா வகையிலும் போலீஸாருக்கு ஒத்துழைப்பு கொடுத்து வருகிறோம். நேற்று முன்தினம் நான் சென்ற காரை, செக்போஸ்ட்டில் சோதனை செய்ய வேண்டும் என கூறி என்னை காரில் இருந்து இறங்க சொல்லி அவமானப்படுத்தினர். மீண்டும் இன்று, முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி சென்ற காரை சோதனை செய்ய நிறுத்தியுள்ளனர்.
"சோதனை செய்து கொள்ளுங்கள்' என அன்புமணி கூறியும், வெகு நேரம் காக்க வைத்து அவமானப்படுத்தியதோடு, அங்கிருந்த தொண்டர்கள் வந்து பார்த்தபோது, எங்கள் கட்சியின் முன்னாள், இன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இது போன்ற நிகழ்வுகள் திட்டமிட்டு, அமைச்சர் வேலு தூண்டுதலின் பேரில் நடந்து வருகிறது. இது குறித்து தேர்தல் கமிஷன், முதல்வருக்கு புகார் மனு அனுப்பியுள்ளோம். "தகுந்த நடவடிக்கை எடுப்பார்கள், நியாயம் கிடைக்கும்' என நம்புகிறோம்.
பா.ம.க.,வினர் எந்த நேரத்திலும் அமைதி காக்க வேண்டும். எவ்வளவு துன்புறுத்தல் இருந்தாலும் அமைதியான முறையில் தேர்தலை சந்திக்க அறிவுறுத்தியுள்ளேன். தொடர்ந்து அறிவுறுத்துவேன். தற்போது நடந்துள்ள சம்பவங்கள் தேர்தல் அமைதியான முறையில் நடக்குமா? என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. தோல்வியை தெரிந்து கொண்டு இது போன்று வன்முறையில் ஈடுபடுவதோடு, போலீஸாரின் துணையோடு எங்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.