
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் கல்வியாளர் பேரா. டாக்டர் சபாபதி அவர்கள் தமிழ் சாரல் மீடியா நெட்ஒர்க்கிற்க்கு அளித்த சிறப்பு நேர்காணல்.
வேலூர் மாவட்டத்தில் பணியின் போது செல்போன் வைத்திருந்த அரசு பேருந்து ஓட்டுநர்கள் 4 பேர் பணி இடை நீக்கம் செய்யப்பட்டனர்.
இரு நாட்களுக்கு முன்பு சென்னையில் இருந்து திருவண்ணாமலை சென்று கொண்டிருந்த அரசு பேருந்து எதிரே வந்த மற்றொரு அரசு பேருந்துடன் மோதி விபத்துக்கு உள்ளானது.
இதில் மூன்று பெண்கள் பலியானார்கள். மேலும் பலர் படுகாயம் அடைந்தார்கள். இரண்டு பேருந்திலும் ஓட்டுநர்கள் செல்போனில் பேசிய படியே ஓட்டியதால் இந்த விபத்து ஏற்பட்டது பின்னர் தெரியவந்தது.
அரசு பேருந்துகள் உட்பட வாகனங்களில் ஓட்டுநர்கள் செல்போன் பயன்படுத்தக்கூடாது என அரசாங்க உத்தரவு அமலில் உள்ளது. எனினும் பல டிரைவர்கள் இதை மீறி செல்போன்களை பயன்படுத்தி வருகின்றனர்.
இதைதொடர்ந்து நேற்று வேலூர் மண்டல அரசு போக்குவரத்து மேலாளர் ஜெகதீசன் உத்தரவின் பேரில் போக்குவரத்து துறை அதிகாரிகள் வேலூர் புதிய, பழைய பேருந்து நிலையம் காட்பாடி, பாகாயம் உட்பட பல இடங்களில் பேருந்து ஓட்டுநர்களிடம் சோதனை நடத்தினர்.
அப்போது 11 செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. செல்போன் வைத்திருந்த 4 ஓட்டுநர்கள் பணி இடை நீக்கம் செய்யப்பட்டனர்.
அரசு பேருந்துகளை இயக்கும்போது ஓட்டுநர்கள் பேசினால் அல்லது வைத்திருந்தாலோ 94454 56027 அல்லது 94454 56028 என்ற எண்களில் புகார் செய்யலாம்.