ஜார்க்கண்டில் மாவோயிஸ்டுகளால் ஜேஎம்எம் தலைவர் சுட்டுக் கொலை!

ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியைச் சேர்ந்த சிம்தேகா மாவட்டத் தலைவர் பிர்சா படேய்க் மாவோயிஸ்டுகளால் நேற்றிரவு சுட்டுக் கொல்லப்பட்டார்.

ஜகேஸ்வர் என்ற தேபு என்ற உள்ளூர் மாவோயிஸ்ட் தலைவரின் தலைமையில் 15 பேர் கொண்ட கும்பல் இந்தச் செயலில் ஈடுபட்டாக போலீஸார் தெரிவித்திருக்கின்றனர். அவர்களை போலீஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

வேறொரு சம்பவத்தில் பந்த்கான் பகுதியில் நடந்த சோதனையின்போது மாவோயிஸ்டுகளின் பயிற்சி முகாம் தரைமட்டமாக்கப்பட்டது. அந்தப் பகுதியிலிருந்து 10 நிலக் கண்ணி வெடிகள் கைப்பற்றப்பட்டன.