
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் கல்வியாளர் பேரா. டாக்டர் சபாபதி அவர்கள் தமிழ் சாரல் மீடியா நெட்ஒர்க்கிற்க்கு அளித்த சிறப்பு நேர்காணல்.
புதுதில்லி, மார்ச் 10: மகளிர் இடஒதுக்கீட்டு மசோதாவுக்கு எதிர்புத் தெரிவித்து மக்களவையில் சமாஜ்வாதி, ராஷ்ட்ரீய ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
நாடாளுமன்றத்திலும் மாநில சட்டப் பேரவையிலும் மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் மசோதா கடந்த 8-ம் தேதி மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு சமாஜ்வாதி, ராஷ்ட்ரீய ஜனதா தளம் ஆகிய கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதனால் அன்று முழுவதும் அந்த மசோதா மீது வாக்கெடுப்பு நடத்த முடியாமல் போனது.
இதையடுத்து, நேற்று மாநிலங்களவை கூடியதும் அமளியில் ஈடுபட்ட 7 உறுப்பினர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். பின்னர் மசோதா அவையில் நிறைவேற்றப்பட்டது.
இந்த நிலையில், இன்று மக்களவை கூடியதும் சமாஜ்வாதி, ராஷ்ட்ரீய ஜனதா தளம் ஆகிய கட்சிகளைச் சேர்ந்த எம்.பிக்களும், ஐக்கிய ஜனதா தளத்தைச் சேர்ந்த சில உறுப்பினர்களும் அமளியில் ஈடுபட்டனர். மாநிலங்களவையில் எதேச்சதிகார முறையில் மகளிர் மசோதா நிறைவேற்றப்பட்டதாக அவர்கள் அரசுக்குக் கண்டனம் தெரிவித்தனர்.
சமாஜ்வாதி தலைவர் முலாயம் சிங் மற்றும் ராஷ்ட்ரீய ஜனதா தலைவர் லாலு பிரசாத் ஆகியோரும் அவைத்தலைவர் இருக்கைக்கு முன் சென்று கோஷம் எழுப்பினர்.
அமளி தொடர்ந்ததால் இரு முறை அவை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர், நாள் முழுவதும் அவை ஒத்திவைக்கப்படுவதாக மக்களவைத் தலைவர் அறிவித்தார்.