மலேசியாவில் தீ விபத்து: 4 இந்தியர்கள் சாவு

கோலாலம்பூர்: மலேசியாவின் தென்பகுதியில் சிங்கப்பூருக்கு அருகில்  உள்ள ஜொஹூர் மாகாணத்தில் புடவைக் கடை ஒன்றில் புதன் கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் 4 இந்தியர்கள் பலியானார்கள்.

   ஜோஹர் மாகாணத்தில் உள்ள புடவைக் கடை ஒன்றில் புதன்கிழமை அதிகாலை 3 மணியளவில் திடீரென தீ பிடித்ததில் 4 இந்தியர்கள் கருகி உயிரிழந்ததாக அந்த மாகாண தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை துணை இயக்குநர் சுகோர் சானி ஹாஷிம் தெரிவித்தார். இந்த விபத்தில் பலியானவர்களின் பெயர் மற்றும் மற்ற விவரங்களை அவர் தெரிவிக்கவில்லை. இந்த விபத்தால் அருகில் இருந்த மற்ற 3 கடைகளும் சேதம் அடைந்ததாக அவர் கூறினார். இந்த விபத்து குறித்து விரிவான விவரங்கள் எதுவும் இது வரை தெரியவில்லை.