
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் கல்வியாளர் பேரா. டாக்டர் சபாபதி அவர்கள் தமிழ் சாரல் மீடியா நெட்ஒர்க்கிற்க்கு அளித்த சிறப்பு நேர்காணல்.
பென்னாகரம்: பென்னாகரம் சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்றுடன் முடிவடைகிறது.
தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தல் வரும் 27ஆம் தேதி நடக்கிறது. தி.மு.க, அ.இ.அ.தி.மு.க, தே.மு.தி.க, பா.ம.க இடையே நான்குமுனை போட்டி நிலவுகிறது.
வேட்புமனு தாக்கல் கடந்த 3ஆம் தேதி தொடங்கியது. நேற்று முன்தினம் வரை 14 பேர் மனு தாக்கல் செய்திருந்தனர். நேற்று 5 பேர் சுயேச்சையாக மனு தாக்கல் செய்தனர். சில வேட்பாளர்களின் பெயர்களில் பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த மனுக்களையும் சேர்த்து மொத்தம் 34 மனுக்கள் தாக்கலாகியுள்ளன.
மனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள். இன்று பிற்பகல் 3 மணி வரை மனுக்கள் பெறப்படும். மனுக்கள் பரிசீலனை நாளை நடக்கிறது. மனுக்களை வாபஸ் பெற 13ஆம் தேதி கடைசி நாள். அன்று மாலை, இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். வாக்காளர் இறுதி பட்டியல் இன்று வெளியிடப்படுகிறது.