
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் கல்வியாளர் பேரா. டாக்டர் சபாபதி அவர்கள் தமிழ் சாரல் மீடியா நெட்ஒர்க்கிற்க்கு அளித்த சிறப்பு நேர்காணல்.
கராச்சி : ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின்போது விதிமுறைகளை மீறி ஒழுங்கீனமாக நடந்த பாகிஸ்தான் வீரர்கள் முகமது யூசுப், யூனிஸ் கான் இருவருக்கும் அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் காலவரையற்ற தடை விதித்துள்ளது.சமீபத்தில் ஆஸ்திரேலியாவுடன் நடந்த தொடர்களில் பாகிஸ்தான் அணி மோசமாக விளையாடி படுதோல்வி அடைந்தது. சில வீரர்கள் சூதாட்ட புகாரில் சிக்கினர். இது குறித்து விசாரிக்க குழு ஒன்றை பாக். வாரியம் நியமித்தது. இந்த குழுவினர் சமர்ப்பித்த விசாரணை அறிக்கையின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட வீரர்களுக்கான தண்டனையை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நேற்று அறிவித்தது.முன்னாள் கேப்டன்கள் முகமது யூசுப், யூனிஸ் கான் இருவரும் சர்வதேச போட்டிகளில் விளையாட ஆயுள்தடை விதிக்கப்பட்டுள்ளது. இவர்கள் உள்ளூர் போட்டிகளில் மட்டும் விளையாட அனுமதிக்கப்படுவர்.சோயிப் மாலிக், ராணா நவேத் இருவருக்கும் ஓராண்டு தடை மற்றும் தலா ரூ.20 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. விக்கெட் கீப்பர் கம்ரான் அக்மலுக்கு ரூ. 30 லட்சம், அவரது சகோதரர் உமர் அக்மலுக்கு ரூ. 20 லட்சம், பந்தை கடித்து சேதப்படுத்திய ஆல்ரவுண்டர் ஷாகித் அப்ரிடிக்கு ரூ.30 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இஜாஸ் மறுப்பு: யூசுப், யூனிஸ் இருவருக்கும் ஆயுள் தடை விதிக்கப்பட்டுள்ளதாக முதலில் வெளியான தகவல்கள் தெரிவித்தன. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பாக். வாரியத் தலைவர் இஜாஸ் பட் இந்த செய்தியை மறுத்ததுடன், தேவைப்படும்போது இந்த வீரர்கள் பாகிஸ்தான் அணியில் சேர்க்கப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.