
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் கல்வியாளர் பேரா. டாக்டர் சபாபதி அவர்கள் தமிழ் சாரல் மீடியா நெட்ஒர்க்கிற்க்கு அளித்த சிறப்பு நேர்காணல்.
இந்திய பெண்கள் ஹாக்கி அணியின் பயிற்சியாளர் எம்.கே.கவுசிக் எதிராக வீராங்கனை கொடுத்த பாலியல் புகாரின் பேரில் சாட்சியங்கள் அடிப்படையில் அறிக்கையை தயாரித்து, ஹாக்கி இந்தியா அமைப்பிடம் ராஜீவ் மேத்தா தலைமையிலான கமிட்டி சமர்ப்பித்துள்ளது.
இந்திய பெண்கள் ஹாக்கி அணியின் பயிற்சியாளர் எம்.கே.கவுசிக் தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக ரஞ்சிதா தேவி என்ற வீராங்கனை புகார் கூறினார். இதை தொடர்ந்து கவுசிக் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த விவகாரம் தொடர்பாக விசாரிக்க ராஜீவ் மேத்தா தலைமையில் 4 பேர் கொண்ட கமிட்டி அமைக்கப்பட்டது. சம்பந்தப்பட்ட இரு தரப்பினரிடமும் அவர்கள் விசாரணை நடத்தினர்.
ஆனால் இந்த விவகாரத்தில், விசாரணை கமிட்டியால் ஒரு முடிவுக்கு வரமுடியவில்லை. சாட்சியங்கள் அடிப்படையில் அறிக்கையை தயாரித்து, ஹாக்கி இந்தியா அமைப்பிடம் நேற்று சமர்ப்பித்தனர்.
இது பற்றி ஹாக்கி இந்தியா அமைப்பின் பொதுச்செயலர் நரிந்தர் பாத்ரா கூறுகையில், ''கமிட்டியிடம் இருந்து அறிக்கையை பெற்றுக்கொண்டோம். அறிக்கையை முழுவதுமாக படித்து பார்த்த பின்னர் எங்களது பரிந்துரைகளையும், அறிக்கையையும் இந்திய விளையாட்டு ஆணையத்திடம் 24ஆம் தேதி (இன்று) சமர்ப்பிப்போம்'' என்றார்.
விசாரணை கமிட்டி சேர்மன் ராஜீவ் மேத்தா கூறுகையில், ''பயிற்சியாளர், புகார் கூறிய வீராங்கனை மற்றும் மற்ற வீராங்கனைகள், அணியின் மேலாளர் மதுயாதவ் ஆகியோரின் சாட்சியங்களை பெற்றுள்ளோம். மற்றபடி விசாரணைக்கு தேவையான வேறு எந்த ஆதாரங்களும் கிடைக்கவில்லை'' என்றார்.
பயிற்சியாளர், இந்திய விளையாட்டு ஆணையத்தின் அமைப்பின் பணியாளர் என்பதால் இந்த விவகாரத்தில் இறுதி முடிவை அந்த அமைப்பே எடுக்கும்.