தலைமை தேர்தல் ஆணையராக சஹாபுதீன் யாகூப் குரைஷி நியமனம்

 புதிய தலைமை தேர்தல் ஆணையராக சஹாபுதீன் யாகூப் குரேஷி (63) நியமிக்கப்பட்டுள்ளார்.

தற்போதைய தலைமை தேர்தல் ஆணையர் நவீன் சாவ்லா வரும் 31 ஆம் தேதியுடன் ஓய்வு பெற உள்ளார்.இதையடுத்து புதிய தலைமை தேர்தல் ஆணையராக எஸ்.யாகூப் குரைஷி நியமிக்கப்பட்டுள்ளார்.

எஸ்.யாகூப் குரோஷியின் நியமனத்திற்கு குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் ஒப்புதல் அளித்துள்ளார். 63 வயதாகும் குரைஷி, 3 உறுப்பினர்கள் அடங்கிய தேர்தல் ஆணையத்தின் தலைவராக செயல்படுவார்.

கடந்த 2009 ஆம் ஆண்டின் மத்தியில் தலைமை தேர்தல் ஆணையராக பொறுப்பேற்ற சாவ்லா, ஓராண்டுக்கும் சற்று கூடுதலான காலம் மட்டுமே அப்பதவியில் இருந்துள்ளார்.

தற்போது புதிய தலைமை தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ள குரைஷி, இரண்டாண்டுகளுக்கும் சற்று குறைவான காலத்திற்கு அப்பதவியில் இருப்பார்.