
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் கல்வியாளர் பேரா. டாக்டர் சபாபதி அவர்கள் தமிழ் சாரல் மீடியா நெட்ஒர்க்கிற்க்கு அளித்த சிறப்பு நேர்காணல்.
ஒரு புகழ்பூத்த வைத்தியரும், பிரபலமான வழக்கறிஞரும் விழா ஒன்றில் சந்தித்து சிநேகபூர்வமாக உரையாடிக்கொண்டு இருந்தார்கள். அவர்கள் உரையாடிக்கொண்டு இருக்கும் போது அவர்களின் உரையாடலை அடிக்கடி விழாவுக்கு வந்திருந்த பொதுசனங்கள் இடையிடையே வந்து இலவச மருத்துவசேவையை வழங்கமுடியமா என்று கேட்டும், தமது வருத்தங்களைச் சொல்லியும் வைத்தியரிடம் ஆலோசனை கேட்டு தொந்தரவு கொடுத்துக் கொண்டு இருந்தார்கள். இவ்வாறே ஒரு மணித்தியாலம் ஓடி முடிந்தபின் வைத்தியருக்கு சீ யென்று போய்விட்டது. அவர் வழக்கறிஞரிடம் இவ்வாறு பொதுஇடங்களில் சட்டஆலோசனைகள் கேட்டு தொந்தரவு தருபவர்களை எவ்வாறு நீஙகள் உங்கள் வாழ்வில் சமாளிக்கின்றீர்கள் என்று ஆலோசனை கேட்டார். அதற்கு வழக்கறிஞர் அமைதியாக "நான் உடன் உடன் அந்தந்த இடங்களிலேயே ஆலோசனைகளை வழங்கி விடுவேன். ஆனால் அவ்வாறு ஆலோசனை வழங்குபவர்களிற்கு மறுநாளே அதற்கான செலவை, பற்றுச்சீட்டாக தபாலில் அனுப்பி வைத்துவிடுவேன்" என்று கூறினார். இதைக்கேட்ட வைத்தியருக்கு அதிர்ச்சியாக இருந்தது. ஆனால் பரவாயில்லை இந்தவழியிலாவது எனது நோயாளிகள் பொதுஇடங்களில் என்னை தொந்தரவு செய்வதை தடுப்பதற்கு முயன்று பார்ப்போம் என தனக்குள் நினைத்தபடி அன்றைய தினம் பொதுஇடத்தில் மருத்துவ ஆலோசனைகளை வாங்கியவர்களுக்கு மறுநாள் பற்றுச்சீட்டுக்களை தயார் செய்தார். அவ்வாறு செய்யும் போது வைத்தியருக்கு மனதிற்கு சங்கடமாகவும், குற்ற உணர்வுடன் இருந்தாலும் தனக்கு இனிபொது இடங்களில் நோயாளிகளால் தொல்லைவராது என்பதை நினைக்க சந்தோசமாக இருந்தது! வைத்தியரும் இந்தபற்றுச்சீட்டுக்களை தபால் பெட்டியில் போடுவதற்காகச் சென்ற போது, தனக்கு அன்றைய தினம் வந்த தபால்களை வாசிக்கத் தொடங்கினார். வைத்தியருக்கு சட்ட ஆலோசனைக்கான 1000 டொலர் பற்றுச்சீட்டு ஒன்று நேற்றையதினம் சட்ட ஆலோசனை கொடுத்த வழக்கறிஞரிடமிருந்து அனுப்பி வைக்கப்பட்டிருந்தது