திருப்பூர்,செப்.24 : திருப்பூரில் உள்ள தனியாருக்கு சொந்தமான அடகு கடையில் வைக்கப்பட்டிருந்த நகைகளை மர்மநபர்கள் கொள்ளயைடித்துச் சென்றனர்.
திருப்பூரில் முத்தூட் பைனான்ஸ் என்ற நகை அடமான வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் பொதுமக்களிடமிருந்த பெறப்பட்ட 3 ஆயிரத்து 489 பவுன் நகை பாதுகாத்து வைக்கப்பட்டிருந்தது.
இன்று காலை 10 மணி அளவில் மர்ம கும்பல் ஒன்று புகுந்தது. கையில் இருந்த மிளகாய்ப் பொடியைத் தூவி, மேனேஜர் மற்றும் துப்புரவுப் பணியாளரைக் கட்டிப்போட்டது. பின்னர் அங்கிருந்த ரூ.10கோடி மதிப்பிலான நகை, பணம் ஆகியவற்றைக் கொள்ளையடித்து தப்பியோடியது.
இந்தத் தகவலைக் கேள்விப்பட்டதும், அந்த நிறுவனத்தில் நகை, பணம் வைத்திருந்தவர்கள் நூற்றுக்கணக்கில் அந்த இடத்தில் கூடியதால் அங்கே பரபரப்பு நிலவுகிறது.
தகவல் அறிந்த திருப்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சம்பவ இடத்தில் திருப்பூர் எஸ்.பி., பாலகிருஷ்ணன் நேரில் சென்று பார்வையிட்டார்.
| < முந்தைய | அடுத்த > |
|---|



















