![]()
மதுரை,அக்.4 : நில அபகரிப்பு புகாரில் கைது செய்யப்பட்ட முன்னாள் தி.மு.க அமைச்சர் கே.என்.நேரு உட்பட 8 நபர்களுக்கு மதுரை உயர் நீதிமன்ற கிளை நிபந்தனை ஜாமீன் விடுத்துள்ளது.
திருச்சியில் அண்ணா அறிவாலயம் கட்டுவதற்காக நிலம் அபகரிப்பு செய்ததாக முன்னாள் அமைச்சர் நேரு உள்பட 8 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில் நேரு உள்பட 8 பேருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது மதுரை கிளை உயர்நீதிமன்றம்.
இதன்படி நேரு மற்றும் துணை மேயர் அன்பழகன் ஆகியோர் திருச்சி கோர்ட்டிலும், நேருவின் தம்பி ராமஜெயம் உட்பட 6 பேர் மதுரை கோர்ட்டிலும் கையெழுத்திட வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.
| அடுத்த > |
|---|



















