
குவைத், அக்.4: குவைத் தேசிய பெட்ரோலியம் நிறுவனத்தின், மினா அல் அஹ்மதி என்ற எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில், தமிழகத்தைச் சேர்ந்த 4 பேர் பலியாகியுள்ளனர். குவைத் இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள செய்தியில், ராஜாராம் லட்சுமையா ரெட்டி, லோகநாதன் பொன்னையா செந்திவேல், ஜானகிராமன் அர்ஜுனன் மற்றும் சிவச்சந்திரன் சண்முகம் என, நான்கு தமிழர்களும் பலியானதாக குறிப்பிடப்பட்டுள்ளது. பலியானோர் உடல்களை, இந்தியாவுக்குக் கொண்டு வருவது குறித்த சட்ட நடவடிக்கைகளில் இந்திய தூதரகம் ஈடுபட்டுள்ளது.
| < முந்தைய | அடுத்த > |
|---|



















