
துபாய் : துபாயில் இரண்டாம் உலகத் தமிழ்ர் பொருளாதார மாநாடு 02.10.2011 ஞாயிற்றுக்கிழமை காலை வெகு சிறப்பாக தொடங்கியது.
மாநாட்டினை இந்திய அமைச்சர் வீரப்ப மொய்லி துவக்கி வைத்து விழாப் பேருரை நிகழ்த்தினார். மாநாட்டு அமைப்புக் குழு தலைவர் முனைவர் சம்பத் வரவேற்புரை நிகழ்த்தினார்.
மாநாட்டில் மலேசிய முன்னாள் அமைச்சர் டத்தோ சாமிவேலு, இந்திய தூதர் எம்.கே. லோகேஷ், இந்திய கன்சல் ஜெனரல் சஞ்சய் வர்மா, ஈடிஏ அஸ்கான் ஸ்டார் குழும மேலாணமை இயக்குநர் சையது எம் ஸலாஹுத்தீன், நீதியரசர் ஏ.ஆர். இலட்சுமணன், இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் எம். அப்துல் ரஹ்மான், அழகிரி, ஜின்னா, தொழிலதிபர்கள் வீரமணி, சித்தார்த் பாலச்சந்திரன், மலேசிய துணைத் தூதர் சம்சுதீன், தோஹா வங்கி தலைமை நிருவாக அதிகாரி சீத்தாராமன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
மாநாட்டில் இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, மலேஷியா, ஓமன், கத்தார் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து தமிழ் வணிகப் பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.
அக்டோபர் 4 ஆம் தேதி வரை நடைபெறும் இம்மாநாட்டில் பங்கேற்க விரும்பும் அமீரகத் தமிழ் வணிகப் பிரமுகர்கள், தொழில் வல்லுநர்கள் மற்றும் பார்வையாளர்கள் 050 467 43 99 / 050 51 96 433 ஆகிய தொடர்பு கொண்டு அனுமதி அட்டைகளைப் பெறலாம்.
| அடுத்த > |
|---|



















